தேனி

வருசநாடு அருகே ஒருவருக்கு அரிவாள் வெட்டு

வருசநாடு அருகே ஒருவரை அரிவாளால் வெட்டியதாக மற்றொருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

DIN

வருசநாடு அருகே ஒருவரை அரிவாளால் வெட்டியதாக மற்றொருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 குமணன்தொழுவைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ரஞ்சித்குமார் (24). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்து, அவரது மகன்கள் செல்வம் மற்றும் செழியன் ஆகியோருக்கும் இடையே தோட்டம் சம்பந்தமான பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித்குமாரை மற்றொரு தரப்பைச் சேர்ந்த செல்வம், செழியன் மற்றும் முத்து ஆகியோர் அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த ரஞ்சித்குமார், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் செல்வம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து ராமையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT