தேனி

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ்: தேனி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கின

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தேனி மாவட்டத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் ஓடத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியது.

DIN

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தேனி மாவட்டத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் ஓடத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியது.
 மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 50 சதவிகிதத்திற்கும் மேல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
 குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கப்பட்டதால் வீரபாண்டி சித்திரை திருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்குச் சென்று வரும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, புதன்கிழமை அதிகாலை முதல் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின. போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT