தேனி

கார் மோதி டிராக்டரில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டர் மீது கார் மோதியதில், டிராக்டரில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

DIN

ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டர் மீது கார் மோதியதில், டிராக்டரில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
 ஆண்டிபட்டி அருகே எஸ்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (39). இவர், மாட்டுத் தீவனமான சோளத்தட்டையை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு, 5 பேருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், டிராக்டர் மீது மோதியதில் சோளத்தட்டை மீது அமர்ந்திருந்த வேலுச்சாமி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த எழுமலையைச் சேர்ந்த கருப்பையா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT