தேனி மாவட்டத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விரும்புபவர்கள், கால்நடை உதவி மருத்துவர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் நாட்டுக் கோழி மற்றும் கறிக் கோழி பண்ணை அமைக்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர், அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.