தேனி

சின்னமனூர் அருகே தனியார் பேருந்து- சரக்கு வாகனம் மோதல்: 3 பேர் பலத்த காயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புதன்கிழமை தனியார் பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட  விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

DIN

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புதன்கிழமை தனியார் பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட  விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 கம்பம் அருகேயுள்ள கே.கே.பட்டியைச் சேர்ந்த சங்கர் மகன் ரவிக்குமார் (35). இவர் தேனிக்கு சரக்கு  வாகனத்தில் திராட்சை பழங்களை ஏற்றிக் கொண்டு சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது எதிரே தேனியிலிருந்து கம்பம் நோக்கி சென்ற  தனியார் பேருந்தும் சரக்கு  வாகனமும்  மோதிக் கொண்டன. இதில்,  சரக்கு வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரன்,  உதவியாளர் கம்பத்தை சேர்ந்த வீரமணிகண்டன் (26) மற்றும் பயணி சின்னமனூர் அருகேயுள்ள கன்னியம்பிள்ளை பட்டியை சேர்ந்த  முருகன் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை சின்னமனூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.
சின்னமனூர் போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT