தேனி

தேனி மாவட்டத்தில் 84 சதவிகிதம் குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விநியோகம்

தேனி மாவட்டத்தில் இதுவரை 84  சதவிகிதம் குடும்பத்தினருக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

DIN

தேனி மாவட்டத்தில் இதுவரை 84  சதவிகிதம் குடும்பத்தினருக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 91 ஆயிரத்து 422 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், 3 லட்சத்து 27 ஆயிரத்து 841 குடும்ப அட்டைதாரர்களுக்கு (84 சதவிகிதம்)  மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
 63,581 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதில், போடி வட்டாரத்தில் அதிக அளவில் 93 சதவிகிதம் குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேனி வட்டாரத்தில் 87 சதவிகிதம் குடும்பங்களுக்கும்,  பெரியகுளம் வட்டாரத்தில் 69 சதவிகிதம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் 79 சதவிகிதம், உத்தமபாளையம் வட்டாரத்தில் 88 சதவிகிதம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 மின்னணு குடும்ப அட்டை பெற்றுள்ளவர்கள் இம்மாதம் (செப்டம்பர்) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அதை  கொண்டு சென்று பதிவு செய்து, பொருள்கள் பெறலாம் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் ரசிகலா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

8 மாதங்களாக விடுவிக்கப்படாத உணவு செலவுத் தொகை: ஆதி திராவிடா் நல விடுதியில் உணவு வழங்குவதில் சிக்கல்

மூமுக நிா்வாகிக்கு கத்திக் குத்து

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

SCROLL FOR NEXT