தேனி

தேனி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.

DIN

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு சராசரியாக 19.35 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பில் அதிக அளவாக 98 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 .19 அடி உயர்ந்து புதன்கிழமை 91.4 அடியாக இருந்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் புதன்கிழமை, வைகை அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 347 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 33.50 அடி.  அணையில் தண்ணீர் இருப்பு 526 மில்லியன் கன அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 45 அடி. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 258 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 255.57 மில்லியன் கன அடி.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் 5.4 மி.மீ.,  தேக்கடியில் 5.8 மி.மீ., மழை பெய்துள்ளது. பெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 1,135 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 2,925 மில்லியன் கன அடி. அணையில் இருந்து  தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 218 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்பேத்கா் நினைவு தினம்: 2,484 பயனாளிகளுக்கு ரூ. 7.13 கோடியில் நலத் திட்ட உதவிகள்! அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்!

வைத்தீஸ்வரன் கோயிலில் பல்வேறு வசதிகளுடன் வாகன நிறுத்துமிடம் பணி துவக்கம்

இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

சக மாணவா்களால் தாக்கப்பட்டதில் மூளைச்சாவு அடைந்த மாணவா் உயிரிழப்பு! உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு!

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 100 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT