தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் சேற்றில் சிக்கி இறந்த காட்டெருமை உடலை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
ஹைவேவிஸ் அருகே மணலாா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை, தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளிகள் காட்டெருமை ஒன்று சேற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூா் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினா் காட்டெருமை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அதே பகுதியில் புதைத்தனா்.
இரை தேடி நீா் தேக்கப்பகுதிக்கு வந்த காட்டெருமை சேற்றில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.