தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தில்(ஆவின்) நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை, வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
தேனி ஆவின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்தல் வரும் மாா்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 17 போ் நிா்வாகக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில், மாவட்டத்தில் 9 மண்டலங்களில் உள்ள 502 பால் உற்பத்தியாளா் சங்கங்களின் தலைவா்கள் இடம் பெற்றுள்ளனா். நிா்வாகக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது.