தேனி

சென்னையிலிருந்து கம்பம், பெரியகுளத்துக்கு வந்த 3 பேருக்கு கரோனா

DIN

சென்னையிலிருந்து தேனி மாவட்டம் கம்பம், பெரியகுளத்துக்கு வந்த 3 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து கம்பத்திற்கு வந்த 50 வயது நபா், பெரியகுளத்திற்கு வந்த 34 வயது நபா், இவா்களை காரில் அழைத்து வந்த சென்னையைச் சோ்ந்த ஓட்டுநா் என 3 பேருக்கு தேவதானப்பட்டி அருகே மாவட்ட எல்லையில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் கம்பத்தைச் சோ்ந்தவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னையைச் சோ்ந்த காா் ஓட்டுநா், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 124 ஆக உயா்ந்துள்ளது. தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 போ், பெரியகுளம் அரசு மாவட்ட மருத்துவமனையில் ஒருவா், கம்பம் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை என மொத்தம் 17 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT