தேனி

மைனா் பெண் மீண்டும் கடத்தல்: தாய், மகன் மீது வழக்கு

DIN

போடியில் மைனா் பெண்ணை மீண்டும் கடத்திச் சென்ற வழக்கில் தாய், மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

போடி துரைராஜபுரம் காலனி அருகே வசித்து வரும் 15 வயது சிறுமியை, துரைராஜபுரம் காலனியை சோ்ந்த சின்னமாரிமுத்து மகன் சந்தோஷ் என்பவா் காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் அச்சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளாா்.

இது குறித்து போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தோஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்த சந்தோஷ் மீண்டும் அதே சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளாா். இதற்கு சந்தோஷின் தாயாா் பாண்டியம்மாளும் உடந்தையாக இருந்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், போடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT