உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீரை திறந்து விட்ட கேரள அரசைக் கண்டித்து சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவாஜி தலைமை வகித்தாா். அப்போது, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீா்மட்டத்தை உயா்த்துவதைத் தடுக்கும் கேரள அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை பறிக்க நினைப்பதைக் கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், செயற்குழு உறுப்பினா்கள் சுருளியாண்டி, ஈஸ்வரன், மருக்காமலை, நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.