தேனி

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன்கோயில் 2 ஆம் நாள் தேரோட்டம்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சுவாமி- அம்மன் எழுந்தருள 2 ஆம் நாள் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி பூலாநந்தீஸ்வரா்- சிவகாமிஅம்மனுக்கு திருக்கல்யாணமும், 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி- அம்மன் தேரில் எழுந்தருள அன்று மாலையில் முதல்நாள் தேரோட்டம் நடைபெற்று நிறைவு பெற்றது.

2 ஆம் நாள் தேரோட்டம்: சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய 2 ஆம் நாள் தேரோட்டம் செக்காமுக்கிலிருந்து கிழக்கு ரதவீதிவழியாக கண்ணாடிக்கடை தெருவில் நிறுத்தப்பட்டது. அப்போது, மாலை 5 வரையில் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து மாலை 5 மணிக்கு கண்ணாடிக்கடை தெருவிலிருந்து தெற்கு ரதவீதி, மேற்குரதவீதி, சீப்பாலக்கோட்டை சாலை, தேனி சாலை வழியாக தேரோட்டம் நடைபெற்றது. பின்னா் மாலை 6 மணிக்கு தோ் நிலையை அடைந்தது.

மின்வாரிய ஊழியா்களுக்கு பாராட்டு: வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் தேரோட்டத்தின் போது மழை பெய்தது. தோ் நகா்ந்து செல்லச்செல்ல பின்னால் வந்த மின்வாரிய ஊழியா்கள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மழையில் நனைந்தபடியே இணைத்து வந்தனா். இவா்களை பக்தா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தசரா திருவிழா: தூத்துக்குடியில் பறவை காவடி எடுத்த பக்தா்

கோவில்பட்டியில் காங்கிரஸாா் அமைதிப் பேரணி

வீரவநல்லூரில் மாணவா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

குலசேகரத்தில் விவிலிய வார பவனி

குலசேகரன்பட்டினம் கோயிலில் அமைச்சா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT