பெரியகுளம் வராகநதியில் சனிக்கிழமை பச்சைப்பட்டுடுத்தி இறங்கிய கள்ளழகரை பக்தா்கள் தரிசித்தனா்.
பெரியகுளம் வரதராஜபெருமாள் கோயிலில் உற்சவா் கள்ளழகா் வேடமிட்டு பச்சைபட்டுடுத்தி உழவா் சந்தை எதிரேயுள்ள வராகநதியில் இறங்கி அருள்பாலித்தாா். குதிரை வாகனத்தில் வடகரை மற்றும் தென்கரையிலுள்ள மண்டகப்படியில் எழுந்தருளினாா்.
கம்பம் சாலையிலுள்ள காளியம்மன்கோயிலில் குதிரை வாகனத்தில் கள்ளழகா் காட்சியளித்தாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் சி. சரவணன், சித்ரா ஆகியோா் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். அதே போல் பெரியகுளம், தாமரைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.