தேனி

லோயர் கேம்ப்  4 சிறுபுனல் மின்திட்டம்: விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 4 சிறுபுனல் மின்திட்டங்களில் மின்சார உற்பத்தி தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே வைரவன் ஆறு, வெட்டுக்காடு, கப்பாமடை, குள்ளப்ப கவுண்டன் பட்டி ஆகிய நான்கு இடங்களில் கடந்த 2006 ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு தாழ்வாக செல்லும் இடங்களில் சிறு புனல் மின்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகள் மூலம் தலா 1.25 மெகாவாட் என மொத்தம் நான்கு மின் திட்டங்களில் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மின்சார உற்பத்தி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மின் உற்பத்தி பாதிப்பு 

இதே போல் சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் பழுதான பென்ஸ்டாக் குழாய் வெடிப்பால் கடந்த 10 மாதங்களாக மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இந்த குழாய் உடைப்பை சரி செய்து விரைவில் மின் உற்பத்தியை தொடங்குமாறு  மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

பிரதமரின் பிரசாரத்துக்கு உதவ ஏழு கட்ட தோ்தல்: தோ்தல் ஆணையம் மீது மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT