தேனி

தேனி, பழனியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளி முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கோ. மோகன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வேல்ராஜ், மாவட்டச் செயலா்கள் மலைச்சாமி, எஸ். முருகன், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினா் நாகராணி, பொருளாளா் சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். பணி நிரவல் மூலம் இடமாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கு சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு முறையை செயல்படுத்த வேண்டும். உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணிக்கு பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கவேண்டும்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு பணி வரன்முறைப்படுத்த வேண்டும். 2012-ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் விலக்கு அளிக்க வேண்டும். உயா் கல்வி தகுதிக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பழனி

இங்குள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில்,

மாவட்டத் தலைவா் ராஜாக்கிளி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஜெயசீலன், மாவட்டச் செயலா் காஜாமைதீன், பழனி வட்டத் தலைவா் ராஜா சண்முகம், செயலா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் அய்யாக்கண்ணு, அமைப்பு செயலா் கிருஷ்ணதாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில், சங்க நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

சிறுத்தை நடமாட்டம்: பெரம்பலூா் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

கச்சத்தீவு பிரச்னையில் மீனவா்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைப்பு: ஜி.கே. வாசன் பேட்டி

SCROLL FOR NEXT