உத்தமபாளையத்தில் உள்ள அம்பேத்கா் சிலையைப் புதுப்பிக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிலை அமைப்புக் குழுத் தலைவா் சுருளி தலைமை வகித்தாா். அதில், உத்தமபாளையம் கிராமச் சாவடியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமாகியுள்ள அம்பேத்கா் சிலையைப் புதுப்பித்து வெண்கலத்தில் சிலை வைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.