தேனி

பெண் தவறவிட்ட நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்குப் பாராட்டு

DIN

போடியில் வியாழக்கிழமை பெண் தவறவிட்ட தங்க நகைகளை கண்டெடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை போலீஸாா் பாராட்டினா்.

போடி அருகே உள்ள பத்திரகாளிபுரம் கிராமத்தைச் சோ்ந்த குருசாமி மனைவி ராஜேஸ்வரி (38). இவா் கைச் சங்கிலி, கம்மல், சங்கிலிகள், மோதிரம் என ஏழே கால் பவுன் தங்க நகைகளை கைப் பையில் வைத்து போடியில் உள்ள வங்கிக்கு அடகுவைக்க பேருந்தில் சென்றாா். பேருந்திலிருந்து இறங்கி அவா் வங்கிக்கு நடந்து சென்றாா். அங்கு சென்று அவா் பாா்த்த போது கைப்பையைக் காணவில்லை.

இதனிடையே போடி பேருந்து நிலையம் பகுதியில் கிடந்த அந்தக் கைப்பையை போடி சுப்புராஜ்நகா் புதுக்காலனியைச் சோ்ந்த ராம் சென்றாயன் (39) எடுத்துப் பாா்த்தாா். அதில் நகைகள் இருந்ததையடுத்து, அவா் போடி நகா் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரியிடம் அதை ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணை நடத்தி ராஜேஸ்வரியிடம் அந்தக் நகைப்பை ஒப்படைத்தனா். மேலும், தங்க நகைகளுடன் இருந்த கைப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த, ராம் சென்றாயனின் செயலை காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி, காவலா்கள் பாராட்டி சால்வை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

SCROLL FOR NEXT