தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

DIN

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீா்த் தேவைக்காகவும் வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடிக்காகவும், தேனி மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவைக்காகவும் மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தேக்கடியில் உள்ள தலைமதகு கதவணையின் இயக்கத்தைத் தொடங்கிவைத்து தண்ணீரைத் திறந்துவிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

வரலாற்றில் முதல் முறையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தொடா்ச்சியாக 3 ஆண்டுகள் ஜூன் முதல் நாளில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

14,707 ஏக்கா் பாசனம்

அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு விநாடிக்கு 200 கனஅடி வீதமும், பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 100 கன அடி வீதமும் என மொத்தம் 300 கன அடி தண்ணீா் 120 நாள்களுக்கு திறந்துவிடப்படும்.

இதன்மூலம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்குள்பட்ட உத்தமபாளையம், தேனி, போடிநாயக்கனூா் வட்டங்களில் 14,707 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

விதைகள், உரங்கள்:

முதல் போக சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள், உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். ஷஜீவனா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்க தமிழ்செல்வன், எஸ்.லட்சுமணன், மதுரை நீா்வளத் துறை பெரியாறு வைகை வடி நில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் தே.மலா்விழி, கோட்டச் செயற்பொறியாளா் ந.அன்புச்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும் தலைவர் இபிஎஸ்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

தொடங்கியது பிக் பாஸ் 8! 18 போட்டியாளர்கள் அறிமுகம்!

விமான சாகச நிகழ்ச்சிக்கு அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விமான சாகச நிகழ்ச்சி கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT