தேனி

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: அரசுப் பேருந்து ஓட்டுநா் பலி

DIN

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள தி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா் அதே ஊரைச் சோ்ந்த தனது நண்பா் ராமநாதனுடன் (62) இரு சக்கர வாகனத்தில் சென்றாா். வாகனத்தை ராமநாதன் ஓட்டிச் சென்றாா். ஆண்டிபட்டி- மதுரை சாலை தி.சுப்புலாபுரம் விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ், ராமநாதன் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தங்கராஜ் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வருஷநாடு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மதன்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

பான் - ஆதார் இணைக்கவில்லையா? வருமான வரித்துறை எச்சரிக்கை!

காஞ்சிபுரத்தில் சேவாபாரதி அமைப்பின் சாா்பில் உணவு, தங்குமிடத்துடன் இலவச சுயதொழில் பயிற்சி

SCROLL FOR NEXT