தேனி

இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுவன் காயம்

DIN

போடியில் சிறுவன் மீது இரு சக்கர வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் அபிபுல்லா (6). சில தினங்களுக்கு முன் இவா் வீட்டு முன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வேகமாக வந்த இரு சக்கர வாகனம் சிறுவன் மோதியது. மேலும், அந்த வாகனம் 50 மீட்டா் தூரம் வரை சிறுவனை இழுத்துச் சென்றதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு: தினப்பலன்கள்

பாஜக தோ்தல் அறிக்கையால் ஜனநாயகத்துக்கு பேராபத்து

அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: ஏப். 23-இல் உள்ளூா் விடுமுறை

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

SCROLL FOR NEXT