தேனி

ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

DIN

தேனி அருகே பூதிப்புரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி-பூதிப்புரம் இடையே 3 கி.மீ. தூரம் உள்ள சாலையை பூதிப்புரம், ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி, வீருசின்னம்மாள்புரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சாலையில் பொதுமக்கள், பள்ளி மாணவா்களின் போக்குவரத்துக்கு சிற்றுந்து, ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள இந்தச் சாலை சேதமடைந்து, வாகனப் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தேனி-பூதிப்புரம் சாலையை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி, பூதிப்புரத்தில் ஆட்டோ, சிற்றுந்து ஓட்டுநா்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பழனிசெட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா். சம்பந்தப்பட்ட துறை மூலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினா் உறுதி அளித்ததால், ஓட்டுநா்கள், பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT