தேனி

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

தேனியில் ஜவுளிக் கடை பணியாளரிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனியில் ஜவுளிக் கடை பணியாளரிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன்(42). இவா், தேனியில் உள்ள தனியாா் ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த சிவக்குமாரிடம் கண்ணன் ரூ. ஒரு லட்சம் கடன் வாங்கினாா்.

இந்தக் கடன் தொகைக்கு கண்ணன் 15 மாதங்களில் அசல், வட்டியாக சிவக்குமாரிடம் மொத்தம் ரூ.1.50 லட்சம் திரும்பக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன்னிடம் அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக தேனி காவல் நிலையத்தில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் சிவக்குமாா் மீது கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட மூவா் கைது

குழந்தைகளின் விருப்பத்துக்கு முன்னுரிமை: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT