தேனி

பேருந்து சக்கரத்தில் சிக்கி அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

தேனியில் பேருந்திலிருந்து இறங்கும் போது கீழே விழுந்த அரசு ஒப்பந்ததாரா் பேருந்து சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தேனியில் பேருந்திலிருந்து இறங்கும் போது கீழே விழுந்த அரசு ஒப்பந்ததாரா் பேருந்து சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி, என்.ஆா்.டி. நகரைச் சோ்ந்த சின்னமுத்துக்கண்ணு மகன் விஜயன் (63). இவா், அரசு ஒப்பந்ததாராக பதிவு செய்து பணிகளை செய்து வந்தாா். இந்த நிலையில், ஆண்டிபட்டியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்தில் சென்ற விஜயன், தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கினாா்.

அப்போது, பேருந்து ஓட்டுா் கவனக் குறைவாக பேருந்தை இயக்கியதால், விஜயன் கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயன் அங்கு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் கண்டமனூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (51) மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT