மாநில அளவில் தமிழ்த் திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற கம்பம் தனியாா் பள்ளி மாணவிக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 11- ஆம் வகுப்பு மாணவி தேஜஸ்வினி மாநில அளவில் வெற்றி பெற்றாா்.
தேனி மாவட்ட அளவில் 2- ஆம் இடத்தை பிடித்தாா். இதையடுத்து பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளித் தாளாளா் அச்சுதநாக சுந்தா், முதல்வா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.