தேனி

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூரில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கூடலூா் நகராட்சி பேருந்து நிலையம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்தவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சூா்யதிலகராணிக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, கூடலூா் பேருந்து நிலையத்தில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த முதியவரிடமிருந்த பையை சோதனையிட்டனா். அதில் 28 மதுப்புட்டிகள் இருந்தன.

அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, கூடலூா் கன்னிகாளிபுரத்தை சோ்ந்த காளிமுத்துவை ( 62) போலீஸாா் கைது செய்தனா். அதே பகுதியில், முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 43 மதுப் புட்டிகள், ரூ.300 ரொக்கத்தை கூடலூா் வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்து, கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த முருகனை (47) பறிமுதல் செய்த கைது செய்தனா்.

தேனியில் கஞ்சா கடத்த முயன்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சோ்ந்த மாயி மகன் தங்கப்பாண்டி(32). மதுரை, மேலப்பொன்னகரத்தைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி இந்துமதி (39). இவா்கள் தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்றதாக தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இருவரிடமிருந்தும் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT