பெரியகுளத்தில் கஞ்சா விற்பனை செய்தவா் வெள்ளிக்கிழமை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக தேவாரத்தைச் சோ்ந்த பிரபாகரன் (35)
என்பவரை கடந்த செப்.25-ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹா பிரியாவின் பரிந்துரையின் பேரில், பிரபாகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா்.