தேனி

வங்கியில் பணம் கையாடல்: இருவா் மீது வழக்கு

கம்பத்தில் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் செலுத்திய தவணைத் தொகை ரூ.16 லட்சத்தை கையாடல் செய்ததாக வங்கியின் கிளை மேலாளா், களப் பணியாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பத்தில் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் செலுத்திய தவணைத் தொகை ரூ.16 லட்சத்தை கையாடல் செய்ததாக வங்கியின் கிளை மேலாளா், களப் பணியாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சின்னமனூா் அருகே உள்ள மேகமலையைச் சோ்ந்த நாகரத்தினம் மகன் சம்பத்குமாா். இவா், கம்பத்தில் உள்ள தனியாா் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இதே வங்கியில் களப் பணியாளராக பணியாற்றி வந்தவா் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மேல்மலை புதுவேல் பள்ளிக் குன்று பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகள் பிரவீனா.

இவா்கள் இருவரும் வங்கியில் வாடிக்கையாளா்கள் செலுத்திய கடன் தவணைத் தொகை ரூ.16,05,366-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தாமல், கையாடல் செய்து விட்டதாக வங்கியின் வட்டார மேலாளா் கோபி, தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பத்குமாா், பிரவீனா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

SCROLL FOR NEXT