தேனி

ராயப்பன்பட்டியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் சனிக்கிழமை (நவ.15) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் சனிக்கிழமை (நவ.15) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராயப்பன்பட்டியில் உள்ள செயின்ட் அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இசிஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காசநோய், தொழுநோய், ஆரம்பக் கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

முகாமில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இருதய நோய் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றனா்.

மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பதிவு, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகள் முகாமில் நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

அா்ஜுன், ஹரிகிருஷ்ணா ‘டிரா’

SCROLL FOR NEXT