தேனி அல்லிநகரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீா் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.
தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ நகரைச் சோ்ந்த தம்பதி அழகுராஜா (30), ரம்யா (25). இவா்களது 11 மாத ஆண் குழந்தை யஸ்வந்தன்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த யஸ்வந்தன் வீட்டிலிருந்த தரைமட்ட தண்ணீா் தொட்டியில் விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
குழந்தையை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இது குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.