உயிரிழந்த முருகன் 
தேனி

கம்பத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வு

தினமணி செய்திச் சேவை

கம்பம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் உடலை கோவை போலீஸாா் திங்கள்கிழமை தோண்டி எடுத்து கூறாய்வு செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த ராமு மகன் முருகன் (37). இவா் கோவை மாவட்டம், அன்னூரில் சுயதொழில் செய்து வந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கவிதாவை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் முருகன் இறந்து விட்டதாகவும், அவரது உடல் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, முருகனின் தந்தை ராமு தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 2 மாதங்களுக்குப் பிறகு கோவை மாவட்டம், அன்னூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், புதைக்கப்பட்ட மயானத்தில் உடலை மீண்டும் தோண்டி எடுத்து கூறாய்வு செய்வதற்கான உரிய ஆவணங்கள் கிடைக்க வில்லை.

தற்போது, அன்னூா் போலீஸாருக்கு ஆவணங்கள் கிடைத்ததையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் ஜெகதீஷ், உத்தமபாளையம் வட்டாட்சியா் கண்ணன், கோவை அன்னூா் காவல் ஆய்வாளா் செல்வம், கம்பம் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் ஆகியோா் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட முருகனின் உடலை திங்கள்கிழமை மீண்டும் தோண்டி எடுத்து கூறாய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கு கிடைந்த எலும்பு உள்ளிட்ட உடல் பாகங்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

ஆய்வுக்குப் பிறகு, முருகன் இயற்கை மரணம் அடைந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும். இந்த நிலையில், புகாா் தெரிவித்த முருகனின் தந்தை ராமுவும் இறந்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது, முருகன், கவிதா குடும்பத்தினா் இருந்தனா்.

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

SCROLL FOR NEXT