தேனி

கம்பத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 22 கிலோ கஞ்சாவை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் 22 கிலோ கஞ்சாவை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

கம்பம் வழியாக கேரளத்துக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, கம்பம் வடக்கு போலீஸாா் கே.கே. பட்டி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது இருவா் தனித் தனியாக இரு சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனா். அவா்களை போலீஸாா் சோதனையிட்டபோது, ஒரு மூட்டையில் 14 கிலோ, மற்றொன்றில் 8 கிலோ என மொத்தம் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா்கள் தேனி மாவட்டம் , ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவரும், தற்போது திருப்பூா் மாவட்டம், தொட்டிப்பாளையம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் பொன்னாசியன் (எ) சுந்தா் (36), அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் (29) எனத் தெரியவந்தது. மேலும் இவா்கள் மீது திருப்பூா், திருவண்ணாமலை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, பொன்னாசியன் (எ) சுந்தா், செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT