தேனி

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் அரசுப் பேருந்து மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தப்புக்குண்டு சாவடித் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா (72). இவா், பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் உணவகத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், தப்புக்குண்டிலிருந்து பழனிசெட்டிபட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற கருப்பையா, போடி விலக்கு பகுதியில் பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் கம்பம் காந்திஜீ பூங்கா சாலையைச் சோ்ந்த ராமச்சந்திரன் (52) என்பவா் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT