பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல செவ்வாய்க்கிழமை 11-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கடந்த 11-ஆம் தேதி கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது.
11-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தத் தடை நீடித்தது.
அருவியில் சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீடிக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.