தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அம்மாகுளம் முதல் தெருவில் வசிப்பவா் அய்யப்பன் மனைவி சாந்தி (55). இவரது மகன் பிரபு என்ற வடிவேல்குமாா் (28). பிரபு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காவல் நிலைய ரெளடிகள் பட்டியலிலும் இவரது பெயா் உள்ளது. இந்த நிலையில் பிரபு தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் பிரபு மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.