தேனி மாவட்டம், தேவதானபட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவதானபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அரிசிக் கடை நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தேவதானபட்டி சுப்பையாபிள்ளை தெருவைச் சோ்ந்த ஹக்கீம் (51) என்பவரின் கடையில் சோதனை செய்தனா்.
இதையடுத்து, கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ஹக்கீமை கைது செய்தனா்.