சிவகாசியில் செவ்வாய்க்கிழமை சிற்றுந்து டயர் வெடித்து சிறுமி காயமடைந்தார்.
சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் உள்ள அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ஈஸ்வரி (23). இவர் தனது மூன்று வயது குழந்தையுடன் சிவகாசி பேருந்து நிலையத்தில் சித்துராஜபுரம் செல்லும் சிற்றுந்தில் ஏறியுள்ளார். வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ராணி அண்ணா காலனியில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தபோது, சிற்றுந்தின் பின் டயர் வெடித்ததாம். இதில் டயருடன் சில கம்பிகளும், இரும்பு தூண்டுகளும் சிதறி பயணிகள் மேல் விழுந்தன.
இதில் சிதறிய இரும்பு துண்டு ஈஸ்வரியின் மூன்று வயது குழந்தையின் காலில் விழுந்ததில் அவர் காயமடைந்தார்.இதையடுத்து அச்சிறுமி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர போலீஸார் சிற்றுந்து ஓட்டுநர் உதயன் (28), நடத்துநர் பால்பாண்டி (49) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.