விருதுநகர்

தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது: ஹெச். ராஜா பேட்டி

தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

DIN

தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மக்கள் மருந்தகத்தை புதன்கிழமை திறந்துவைத்த பின்னர் அவர் அளித்த பேட்டி:
இந்த மருந்தகத்தில் 600-க்கும் மேற்பட்ட உயர்தர மருந்துகள் உள்ளன. அறுவைச் சிகிசைக்கு தேவையான மருந்துகள் தரமானதாக கிடைக்கும். வெளிசந்தையைவிட சுமார் 50 சதவிகிதம் விலை குறைவாக இந்த கடையில் வாங்கலாம். மக்கள் நலனில் அக்கறை கொண்டுள பிரதமர் இந்தத் திட்டத்தை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் இதுபோன்ற 68 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கலில் இப்போது திறக்கப்பட்ட கடை மூன்றாவது கடையாகும்.  தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை; தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. 2ஜி வழக்கில் மாறன் சகோதரர்கள் குறித்தும், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை குறித்தும், டி.டி.வி. தினகரன் வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜூலை 15-ஆம் தேதிக்கு பின்னர் தமிழகத்துக்கு எல்லா வகையிலும் விடிவுகாலம் பிறக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT