விருதுநகர்

தேவதானத்தில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியை புதன்கிழமை முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

DIN

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியை புதன்கிழமை முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இருந்து சாஸ்தா கோயில் செல்லும் சாலையில் தாமிரவருணி ஊருணி அமைந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாகவும் உள்ள இந்த ஊருணியை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதனால் இந்த ஊருணியை தூர்வாரி தரும்படி அப்பகுதி மக்கள் ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று ஊருணியை தூர்வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் ஊருணியை தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தனர். இப்பணியில் ஒரு ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் 6 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இக்குளம் முழுமையாக தூர்வாரப்படும் பட்சத்தில் இப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ. தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT