விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகம், மருத்துவமனைகளில் 42 கால்நடை மருத்துவர்கள், 8 முதன்மை கால்நடை மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு, கடந்த காலங்களில் பணிக்கு சேர்ந்த நாளிலிருந்து 24 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னரே பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர்களது கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு, பணிக்கு சேர்ந்த நாள் முதல் அதாவது மூன்று நிலைகளில் 8,16,24 ஆண்டுகளை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்கியது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 980 கால்நடை மருத்துவர்கள் பதவி உயர்வு மூலம் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் பெற்று பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 7- ஆம் தேதி நிதித்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்திவைக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். இதைக் கண்டித்தும், பதவு உயர்வுக்காக கொண்டு வரப்பட்ட அரசாணை எண் 49-ஐ அமல்படுத்த வலியுறுத்தியும், விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் 42 பேர், முதன்மை கால்நடை மருத்துவர்கள் 8, துணை இயக்குநர்கள் 3 பேர் என மொத்தம் 53 பேர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.