விருதுநகர்

ஸ்ரீவிலி. அரசு மருத்துவமனை கழிப்பறையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் கழிப்பறையில் புதன்கிழமை மீட்கப்பட்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

DIN

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் கழிப்பறையில் புதன்கிழமை மீட்கப்பட்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
  பிறந்து ஒரு மணி நேரமான அக்குழந்தையை மருத்துவமனை பணியாளர்கள் மீட்டனர். உடனே குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மூலம் அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சில நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
 அப்போது, காலை 9.25 மணியளவில் பஞ்சவர்ணம் என்ற ஒரு பெண் வயிறு வலி என்று வந்ததாகவும், கர்ப்பமா என மருத்துவர் கேட்டதற்கு இல்லை என்றும் கூறினாராம். இவரது வயிறு பெரிதாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் சிறுநீரக பரிசோதனைக்கு பரிந்துரை செய்தனராம்.
 இதன் பின்னர் இந்தப் பெண் மருத்துவர்களிடம் மீண்டும் வரவில்லை. அதற்குள் பிரசவ வலி வந்து குழந்தை பிறந்திருக்கலாம் என்றும், அதனை கழிப்பறையில் வீசிச் சென்றிருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.  இதற்கிடையே, வன்னியம்பட்டி அருகேயுள்ள லட்சுமியாபுரத்தைச் சேர்நத நூற்பாலை வேன் ஓட்டுநர் ஒருவருக்கும் இப் பெண்ணிற்கும் தவறான தொடர்பில் இக் குழந்தை பிறந்திருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனை சி.சி.டி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT