விருதுநகர்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம்

விருதுநகரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

விருதுநகரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
   விருதுநகரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில அவசர உயர்நிலைக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் சி.சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
  இதில், ராஜபாளையம் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாய நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜமாபந்திக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் கடுமையாக பேசியுள்ளார்.
  எனவே, அவர் மீது சட்டப்படி காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
 மேலும் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் நடத்துவது என்றும்,மே 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது, ஜூன் 5இல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  இதையடுத்து, புதன்கிழமை மாலை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT