சாத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக ரூ. 38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணியை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார்.
சாத்தூர் நகராட்சி மக்கள் தொகை அடிப்படையில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில்,சிதம்பரநகர்,மெஜிரா கோட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை தோண்டி கழிவுநீர் செல்வதற்காக குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இருக்கன்குடி செல்லும் சாலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும், மூன்று இடங்களில் கழிவுநீர் உந்து நிலையமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பாதாள சாக்கடை திட்டத்துக்கான குழாய்கள் அமைக்கும் பணிகளும், கழிவுநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்காணிக்கும் குடிநீர் வடிகால் வாரியமும், நகராட்சி நிர்வாக பொறியாளர்களும் இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்வதில்லை.
மேலும், இத்திட்டத்துக்காக தோண்டப்படும் குழிகளால் பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.