விருதுநகர்

அருப்புக்கோட்டையில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை நகருக்குள் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

DIN

அருப்புக்கோட்டை நகருக்குள் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம்,  பழைய பேருந்து நிலையப் பகுதிகள், காய்கறி மார்க்கெட், சத்திய மூர்த்தி பஜார், காசுக்கடை பஜார், புதுக்கடை பஜார் ஆகிய மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அனைத்துச் சாலைகளும் சேதமடைந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் சமீபத்திய மழை காரணமாக தார்ச்சாலைகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன.
குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள  ஸ்ரீ அமுதலிங்கேஸ்பரர் கோயிலிலிருந்து காய்கறி மார்க்கெட், காசுக்கடை பஜார் வழியாக திருச்சுழி செல்லும் சாலைகளும், நாடார் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திலிருந்து பூக்கடை பஜார் வழியாகச் செல்லும் சாலையும், மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பள்ளிக்கு சைக்கிளில்  செல்லும் மாணவர்கள் பள்ளங்களில் தடுமாறி விழுகின்றனர். நடந்து செல்வோர் கூட பள்ளங்களைத் தாண்ட முற்பட்டுத் தடுமாறி விழுகின்றனர்.இ ருசக்கர வாகன ஓட்டிகளின் நிலையும் இதேதான்.
எனவே நகருக்குள் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT