விருதுநகர்

இரு கிராமத்தினர் மோதல்: சமரசப் பேச்சு  ஒத்திவைப்பு

சாத்தூர் அருகே 2 கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

DIN

சாத்தூர் அருகே 2 கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
சாத்தூர் அருகே உள்ள கோபாலபுரம், இரவார்பட்டி இரண்டு கிராமத்தினருக்கும் இடைய சில தினங்களுக்கு முன்னர் பிரச்னை ஏற்பட்டது. இதில் இரவார்பட்டி கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் இரவார்பட்டி கிராமத்தில் ஆண்கள் யாரும் இல்லை. மேலும் கிராமத்துக்கு வரும் பேருந்தையும் நிறுத்தியுள்ளதால் பள்ளிக்கு கூட மாணவர்கள் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் பிரச்னை தாடர்பாக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இரவார்பட்டி கிராமத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். கோபாலபுரம் கிராமத்தினர் கலந்து கொள்ளாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT