விருதுநகர்

"உரிமம் பெற்ற தயாரிப்பாளர்களின் பட்டாசுகளை மட்டுமே லாரி அலுவலகங்கள் ஏற்க வேண்டும்'

உரிமம் பெற்ற தயாரிப்பாளர்களின் பட்டாசுகளை மட்டுமே லாரி நிறுவனங்கள் அனுப்புவதற்கு  ஏற்க  வேண்டும் என சிவகாசி துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் கூறினார்.

DIN

உரிமம் பெற்ற தயாரிப்பாளர்களின் பட்டாசுகளை மட்டுமே லாரி நிறுவனங்கள் அனுப்புவதற்கு  ஏற்க  வேண்டும் என சிவகாசி துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் கூறினார்.
சிவகாசியில் உள்ள வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை , வெடிபெருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், லாரி அலுவலக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதில் சிவகாசி பகுதியில் உள்ள லாரி புக்கிங் நிறுவன உரிமையாளர்கள்,  சென்னை, பெங்களூர் செல்லும் தனியார் பேருந்து நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சுந்தரேசன் பேசியதாவது: வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிவகாசியில் இருந்து பட்டாசுகளை அனுப்பும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். அது சிவகாசி பகுதியில் தயாரிக்கப்பட்டதா அல்லது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும். பட்டாசுக்கு உரிய பில்,  அனுப்புபவர் பட்டாசு தயாரிக்க முறையாக உரிமம் பெற்றுள்ளாரா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
சட்டவிரோதமாக வீடு மற்றும் அனுமதி பெறப்படாமல் தயாரிக்கப்படும் பட்டாசுகளை அனுப்ப ஏற்கக் கூடாது. பட்டாசுகளை பாதுகாப்பான கிட்டங்கியில் தான் இருப்பு வைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக கிட்டங்கியிலேயோ, லாரி செட்களிலோ இருப்பு வைக்க கூடாது.
லாரி ஷெட்டில் வேலை செய்யும் சுமை தூக்கும் பணியாளர்களை , பட்டாசு பண்டல்களை லாரியிருந்து இறக்கும் போதும், ஏற்றும் போதும் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு வேலை செய்யவும், லாரி செட்டில் புகைபிடிக்கவும் அனுமதிக்கூடாது.
விபத்தில்லா தீபாவளி கொண்டாட அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT