விருதுநகர்

மேசைப்பந்துப் போட்டியில் அருப்புக்கோட்டை மாணவர்கள் வெற்றி

பொறியியல்  கல்லூரிகளுக்கிடையிலான 17-ஆவது மண்டல அளவிலான மேசைப்பந்துப் போட்டியில் அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

DIN

பொறியியல்  கல்லூரிகளுக்கிடையிலான 17-ஆவது மண்டல அளவிலான மேசைப்பந்துப் போட்டியில் அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கல்லூரிகளுக்கிடையிலான 17வது மண்டல அளவிலான மேசைப்பந்துப் போட்டிகள் அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன.
இதில் 10 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 50 மாணவிகள் கலந்து கொண்டனர்.
 இறுதிப்போட்டியில் ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரி மாணவிகளான சாலினி தேவி, ரோஷிணி, காயத்திரி,  துர்கா ஆகியோர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.போட்டிகளில் வென்ற மாணவிகளைக் கல்லூரிச் செயலாளர் பாஸ்கரராஜன், முதல்வர்  சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர்கள் முத்துசுதா, அன்பழகன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர்  செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT