ஸ்ரீவிலி.யில் மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டியைத் தாக்கி 4 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டியைத் தாக்கி 4 பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி 2 ஆவது மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (70). வீட்டில் தனியே வசித்து வருகிறார்.
வீட்டின் வெளியே காய வைத்திருந்த சீரகத்தை அள்ளிக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் படியேறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் மூதாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இதில் காயமடைந்த ராஜம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.