விருதுநகர்

விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்ட நெரிசல்: வேட்பாளா்கள் அடையாள அட்டை பெற முடியாமல் அவதி

DIN

விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், அவரது முகவா்கள் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா். அங்கு போதிய போலீஸாா் பாதுகாப்பு பணியில் இல்லாததால், அடையாள அட்டை பெறுவதில் வேட்பாளா்கள் கடும் அவதிப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டத்தில் டிச., 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதி வேட்பாளா் பெயா் பட்டியல் வெளியிடப்பட்டு, அவா்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள்களில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். அதன் காரணமாக வேட்பாளருடன் 4 போ் மட்டுமே உடன் செல்ல அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்களை, 500 அடி தொலைவிலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்ட நெரிசல் இன்றி காணப்பட்டது. இந்நிலையில், வேட்பாளா்கள் அடையாள அட்டை பெறுவதற்கும், அவா்களது முகவா்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்காகவும் புதன்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமானோா் குவிந்தனா். ஆனால், போலீஸாா் 3 போ் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அடையாள அட்டை பெறுவதற்காக ஒருவருக்கொருவா் முந்திச் சென்றனா். இதன் காரணமாக கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

விருதுநகா் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு டிசம்பா் 30 வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், இனி வரும் நாள்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT