விருதுநகர்

சிவகாசியில் தெருவில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு

DIN

சிவகாசியில் அள்ளப்படாத குப்பைகளால் சுகாதாரக் கேடு பரவி வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  
சிவகாசி பட்டித் தெருவில் ஆண், பெண் என தனித்தனியே கழிவறைகள் உள்ளன. இவை, மகளிர் சுயஉதவிக் குழுக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆண்கள் கழிவறை செல்லும் வழியில், நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தெருக்களில் வண்டி மூலம் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி, பின்னர் அள்ளிச் சென்று வந்தனர்.
இதனால், ஆண்கள கழிவறை இந்த குப்பைகளைத் தாண்டித்தான் செல்லவேண்டும். எனவே, ஆண்கள் கழிவறைக்குச் செல்வதை படிப்படியாகக் குறைத்துக்கொண்டனராம். தற்போது, நகராட்சி அந்த கழிவறையை மூடிவிட்டது. இப்போது, கழிவறை செல்லும் வழியில் குப்பை கொட்டப்பட்டு, வாரம் ஒருமுறை அள்ளப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு பரவி வருகிறது. 
எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் இப்பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியை அமைத்து, அதில் குப்பையை கொட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும். மேலும், மூடப்பட்டுள்ள கழிவறையை மீண்டும் திறந்து பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT